Live : டெல்லி அரசியல் நிலவரம் முதல்., உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் வரை…
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், அடுத்த புதிய முதல்வர் யார் என்பது முதல் தமிழக அரசியல் நிகழ்வுகள் வரை பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 8) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது. இதனை அடுத்து பாஜக சார்பில் யார் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்கள் என்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதே போல, தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலெட்சுமியை விட 91 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இன்று கட்டாக்கில் (ஒடிசா) இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் விளையாட இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா அணி இன்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பிலும், இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பிலும் களமிறங்க உள்ளனர்.