Live : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் முதல்… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரை..

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் உடனுக்குடன் காணலாம்.

Today Live 02122024

Live : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் முதல்… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரை..

சென்னை : வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்தது. இதனால் பெய்த கனமழை காரணமாக புதுச்சேரி,  செங்கல்பட்டு , கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளால் அமளி ஏற்பட்டு ஒருவாரமாக முடங்கிய நிலையில் இன்று காலை 11 மணியளவில் மீண்டும் தொடங்க உள்ளது.

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிகழ்வுகள், மகாராஷ்டிரா முதலமைச்சர் விவகாரம் என பல்வேறு செய்திகளை இதில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

1 of 1
கெளதம்

மீண்டும் மழை:

  • புதுச்சேரியின் கிராமப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை விட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது
  • செல்லிப்பட்டு, சோரப்பட்டு, மணலிப்பட்டு, வழுதாவூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
  • கெளதம்

    மீட்புப் பணிகளில் தொய்வு :

    திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மழை இடையிடையே பெய்வதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது

    கெளதம்

    வெள்ளப்பெருக்கு

  • ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து அரபிக் கடல் நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் சூழலில், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
  • கெளதம்

    நீர் இருப்பு:

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 1.85 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணையில், 1.54 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.

    கெளதம்

    குளிக்க தடை:

  • கனமழையால் சபரிமலைக்கு செல்லும் புல்மேடு, பெரிய பாதை வனப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றனர்.
  • தொடர் மழை காரணமாக பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கெளதம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

    விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலின் சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

    பால முருகன்

    களத்தில் இறங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

  • கடலூர் மாவட்டம் உப்பலவாடி பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் டிராக்டரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
  • கெளதம்

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9 மற்றும் 10 நாட்களில் நடைபெறும். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, சபாநாயகர் அப்பாவு இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

    மணிகண்டன்

    எச்.ராஜா சிறை செல்ல வேண்டாம்

  • எச்.ராஜாவுக்கு 2 வழக்கில் 6,6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டுக்கு கால அவகாசம் அளித்து ஓராண்டு காலம் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.
  • பால முருகன்

    ஓடிடியில் வெளியாகும் கங்குவா

  • கங்குவா திரைப்படம் வரும் டிசம்பர் 13 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • மணிகண்டன்

    எச்.ராஜா குற்றவாளி :

  • பெரியார் சிலையை உடைப்பேன் என கூறப்பட்டதாக பதிவு செய்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மணிகண்டன்

    நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் : 

  • திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 
  • பால முருகன்

    ஜிவி பிரகாஷிற்கு வாய்ப்பு கொடுக்கும் கமல்ஹாசன்!

  • அமரன் படத்திற்கு சிறப்பான இசையை கொடுத்த காரணத்தால் கமல்ஹாசன் தன்னுடைய 237-வது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை ஜிவி பிரகாஷிற்கு வழங்கவுள்ளதாக தகவல். இந்த படத்தை அன்பரிவ் மாஸ்டர்கள் இயக்குகிறார்கள்.
  • கெளதம்

    பல்வேறு ரயில்கள் ரத்து :

    கடும் மழை வெள்ளம் காரணமாக தெற்கு மற்றும் டெல்டா பகுதிகளிலிருந்து சென்னை வரும் பெரும்பாலான ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. அதேபோல சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பகல் நேர விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்

    கெளதம்

    வீடியோ காலில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு :

    கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளம் தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு வீடியோ கால் செய்த முதல்வர் ஸ்டாலின், கள நிலவரங்களை வீடியோ கால் வாயிலாகவே அறிந்துக் கொண்டார்.

    கெளதம்

    முதல்வர் இன்று தேர்வு :

    சமீபத்தில் நடந்து முடிந்த மஹாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றிப் பெற்ற சூழலில், அம்மாநிலத்தின் புதிய முதல்வர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளதாக காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    கெளதம்

    கனமழை – ஏரிகளின் நிலவரம் :

    திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அம்மாவட்டங்களில் உள்ள 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. செங்கல்பட்டில் 103 ஏரிகளும், காஞ்சிபுரத்தில் 10 ஏரிகளும், திருவள்ளூரில் 231 ஏரிகளும் நிரம்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கெளதம்

    நாடாளுமன்றத்தில் தி.மு.க நோட்டீஸ்:

    தமிழகத்தை புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதிக்க கோரி திமுக எம்.பி டி.ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

    பால முருகன்

    விரைவாக செயல்பட வேண்டும்

  • திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
  • கெளதம்

    தங்கம் விலை குறைவு:

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துரூ.56,720க்கும், ஒரு கிராம் ரூ.7,090க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மணிகண்டன்

    மேலும் ஓரிடத்தில் நிலச்சரிவு :

  • திருவண்ணாமலையில் நேற்று பாறை சரிந்து 2 வீடுகள் புதையுண்டதில் 7 பேர் சிக்கியுள்ளனர். தற்போது மீண்டும் ஓரிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
  • கெளதம்

    மேலும் ஓரிடத்தில் நிலச்சரிவு:

  • திருவண்ணாமலையில் நேற்று பாறை சரிந்து 2 வீடுகள் புதையுண்டதில் 7 பேர் சிக்கியுள்ளனர். தற்போது மீண்டும் ஓரிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
  • இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
  • மணிகண்டன்

    வீடியோ காலில் மு.க.ஸ்டாலின் :

  • தென்பெண்ணை ஆறு வெள்ள பாதிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வீடியோ காலில் தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்