LIVE : நெருங்கும் ஃபெஞ்சல் புயல் அப்டேட்ஸ் முதல்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரை…
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் இன்றைய முக்கிய செய்திகள் கிழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : வங்கக்கடலில், உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயல், சென்னைலியிருந்து 140கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது, 12கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மதியம் அல்லது மாலையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயலின் எதிரொலியாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் வெள்ள அபாய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளனர்.