Live : ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிகள் முதல்.. பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் வரை..
ஃபெஞ்சல் புயல் மீட்புப்பணிகள் முதல் தமிழக மற்றும் இந்திய அரசியலில் நிகழும் பரபரப்பான நிகழ்வுகள் வரையில் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் காணலாம்.
சென்னை : வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளில் இருந்து தற்போது தான் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.குறிப்பிட்ட பகுதிகளில் புயல் பாதிப்பு இன்னும் தொடர்கிறது. மீட்ப பணிகளும் அங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு வரவுள்ளார். அவர்கள் இங்கு புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பர்.
“தன்னை ஒரு கருவியாகக் கொண்டு அரசியல் களத்தில் எதிரிகள் காய் நகர்த்த பார்க்கிறார்கள் அதனை தவிர்க்கவே நான் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இன்று நடைபெறும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்.