Live : முதலமைச்சரின் தூத்துக்குடி பயணம் முதல்.. தென் கொரியா விமான விபத்து வரை…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தூத்துக்குடி பயணம் முதல் தென் கொரியா விபத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். மேலும், புதுமை பெண் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நாளை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
தென் கொரியாவில் முவான் விமான நிலையத்தில் ஜேஜூ விமான நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 85 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 175 பயணிகள் 6 ஊழியர்கள் பயணித்துள்ளதால், பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என கூறப்படுகிறது.