Live : முதலமைச்சரின் ‘உங்களில் ஒருவன்’ நிகழ்வு முதல்.., இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த விவகாரம் வரை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உங்களின் ஒருவன் நிகழ்வு முதல் இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த விவகாரம் வரை பல்வேறு செய்திகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Today Live 15022025

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ‘உங்களில் ஒருவன்’ நிகழ்வில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது பதிலை அளித்து இருந்தார். மத்திய பட்ஜெட், கூட்டணி , எதிர்கட்சிகளின் விமர்சனம், மக்கள் நல திட்டங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் பேசினார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இன்று ஹமாஸ் தரப்பு 3 இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்க உள்ளது. ஹமாஸ் தரப்பு இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ளக் கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 of 1
மணிகண்டன்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் :

  • இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தப்படி இன்று 3 இஸ்ரேல் பணய கைதிகளும், 369 பாலஸ்தீனிய பணய கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளனர்.
  • மணிகண்டன்

    மீன்வர்கள் போராட்டம் :

  • தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுக நுழைவு வாயில் முன்பு மீன்பிடி தொழிலாளர்கள் 6வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி அளிக்க கோரி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • மணிகண்டன்

    இரட்டை கொலை :

  • மயிலாதுறையில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் சாராய விற்பனை தொடர்பாக நடைபெறவில்லை எனவும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
  • மணிகண்டன்

    சீமானுக்கு எதிர்ப்பு : 

  • பிரபாகரன் புகைப்படத்தை சீமான் பயன்படுத்த தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 
  • மணிகண்டன்

    முதலமைச்சர் கூட்டத்தில் செங்கோட்டையன் : 

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில வளர்ச்சிக்குழு கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ என்ற முறையில் கலந்துகொண்டுள்ளார்.  
  • பால முருகன்

    முதல்வர் பேச்சு!

  • பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றியுள்ளேன்
  • பால முருகன்

    தங்கம் விலை!

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120க்கும், ஒரு கிராம் ரூ.7,890க்கும் விற்பனை
  • மணிகண்டன்

    பிரதமர் மோடி வாழ்த்து :

  • மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  • மணிகண்டன்

    தமிழ்நாடு பெயர் கூட இல்லை

  • பட்ஜெட்டில் மத்திய அரசு தமிழ்நாட்டை முழுதாக புறக்கணித்துள்ளது. தமிழ்நாடு என்ற பெயரை கூட அவர்கள் உச்சரிக்கவில்லை என உங்களில் ஒருவன் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
  • மணிகண்டன்

    பாஜகவின் டப்பிங் குரல் :

  • எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கள் பாஜகவின் டப்பிங் குரலாகவே தற்போதும் ஒலித்து வருகிறது என உங்களில் ஒருவன் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்