Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!
போகிப் பண்டிகை முதல் கார் ரேஸில்வெற்றி பெற்ற நடிகர் அஜித்துக்கு வாழ்த்துக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை: ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ அதுவே ‘போக்கி’ பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் பழைய பொருட்களை எரித்து மக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பனியுடன் கடும் புகை மூட்டம் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.
கார் ரேஸில் அஜித் டீம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளதை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இப்படி உற்சாகத்தில் அவர்கள் துள்ளும் நிலையில், கோவை போலீசார் ஒரு மீம்-ஐ போஸ்ட் செய்துள்ளனர். அதில், 7G ரெயின்போ காலனி படத்தில் வரும் அப்பா மகன் சீன் ஃபோட்டோவை போட்டு, “திறமை இருந்தா அவர மாதிரி களத்துல ஜெயிக்கணும். அத விட்டுட்டு ரோட்ல சாகசத்தை காட்றேனு கேஸ் வாங்கிட்டு கிடக்காத” என கூறப்பட்டுள்ளது.