சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10:30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட அளவில் மேற்கொள்ளபட்டு கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் தற்போது தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
- தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தேன்.
- தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவும் தீவிரம் குறைந்துள்ளது.
- ஜனவரி 23-ம் தேதி முதல் விமான நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- மத்திய அரசு கூறுவதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கை தமிழகத்தில் துரிதப்படுத்தியது என்றும் கொரோனா தொற்றைத் தடுப்பதுதான் மிக முக்கியம் அதை தான் அரசு செய்து வருகிறது கூறியுள்ளார்.
- தமிழகத்தில் கொரோனாவை தடுக்க 12 குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன.
- கொரோனா பரிசோதனைக்காக பி.சி.ஆர் கருவிகள் தமிழகத்தில் 68,000 உள்ளன.
- புதியதாக 35 ஆயிரம் பி.சி.ஆர் கருவிகள், 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 27 மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 5,590 பரிசோதனைகள் செய்து வருகிறோம். வெளிநாடுகளை போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,267 ஆக அதிகரித்துள்ளது.
- தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14இல் இருந்து 15ஆக உயர்வு.
- தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 180ஆக உயர்வு.
- ஆதரவற்ற 54 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- அரசு மருத்துவர்கள் 6 பேர், தனியார் மருத்துவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று.
- சென்னையில் 1,100 வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறிக் கடைகள் செயல்படுகின்றன என்றும் 4,900 தள்ளுவண்டிகள் மூலமாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.
- இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும்.
- தமிழகத்தில் காய்கறிகள் விலை உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு.
- ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது.
- துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக்டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.