கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில், நேற்றுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார் என கூறியிருந்த நிலையில், தற்போது தமிழக மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய முதல்வர் கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பெருமளவு பாதித்துள்ளது, என்றும் தமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார். மேலும், கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீத பேருக்கு அறிகுறிகளே இல்லை.
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டப்போதிலிருந்து வீட்டிலே இருந்து அதற்க்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களை பாராட்டினார். பயிர்க்கடன், கூட்டுறவுக்கடன், மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.மொத்தமாக 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள், முடிதிருத்துவோருக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வெளியே செல்லும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.வெளியே செல்லும்போது தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் முழு ஒத்துழைப்பு இல்லையெனில் கொரோனா பரவலை தடுப்பது சாத்தியமாகாது என தெரிவித்தார்.
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…
சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட்…