#LIVE: கொரோனா பொருளாதரத்தை பாதித்துள்ளது – முதல்வர்.!

Default Image

கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என  தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில், நேற்றுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார் என கூறியிருந்த நிலையில், தற்போது தமிழக மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அப்போது பேசிய முதல்வர் கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பெருமளவு பாதித்துள்ளது, என்றும் தமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார். மேலும், கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீத பேருக்கு அறிகுறிகளே இல்லை.

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டப்போதிலிருந்து வீட்டிலே இருந்து அதற்க்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களை பாராட்டினார். பயிர்க்கடன், கூட்டுறவுக்கடன், மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.மொத்தமாக 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள், முடிதிருத்துவோருக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வெளியே செல்லும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.வெளியே செல்லும்போது தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் முழு ஒத்துழைப்பு இல்லையெனில் கொரோனா பரவலை தடுப்பது சாத்தியமாகாது என தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்