#LIVE: கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி தமிழக முதல்வர் உரை.!
தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் – முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது தொலைக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடம் பேசி வருகிறார்.
- தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தி இருக்கிறோம்.
- மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நோய் பரவலை தடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- 3 அதிகாரிகளுக்கு உதவ 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- கொரோனாவை தடுப்பதற்காக 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளது.
- சென்னைக்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கபட்டுள்ளது. அதில், மக்கள் தங்களுடைய பிரச்னைகளை தெரிவிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
- கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் அதிகம் பரவல் இருப்பதற்கு காரணம், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தெருக்கள் குறுகலாக இருப்பதும், பொதுக் கழிப்பறை மூலமும் நோய் அதிகம் பரவுகிறது.
- சென்னையில் நடமாடும் பரிசோதனை வாகனம் மக்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று பரிசோதனை மாதிரிகளை சேகரித்து வருகிறது.
- அரசின் நடவடிக்கை காரணமாக சென்னையில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
- சென்னையில் 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.
- 50 பரிசோதனை நிலையங்கள் மூலம் ஒரு நாளுக்கு 12 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதனால் பாதிக்கப்படவர்கள் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது.
- வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதில் அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
- நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
- ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இவசமாக வழங்கப்படும்.