Live : செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி முதல்… அமெரிக்காவில் சைபர் டிரக் வெடித்தது வரை…

இன்று சென்னை செம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சி இன்று தொடங்குவது முதல் அமெரிக்காவில் டெஸ்லா சைபர் டிரக் வெடித்தது வரையில் பல்வேறு தகவல்களை இதில் காணலாம்..

Today Live 02012025

சென்னை :  சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் 30 லட்சம் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரையில் இந்த மலர் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட உள்ளது.

அமெரிக்காவில் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸில் டொனால்ட் டிரம்ப் ஹோட்டல் முன்பு டெஸ்லாவின் சைபர் டிரக் வெடித்து சிதறியது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1 of 1
மணிகண்டன்

குஷ்பூ பேட்டி :

  • பாலியல் வன்கொடுமையை அரசியலாக்காதீர்கள் என பாஜக நிர்வாகி குஷ்பூ செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
  • மணிகண்டன்

    திருமாவளவன் பேட்டி :

  • பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
  • பால முருகன்

    மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர்!

  • சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
  • பால முருகன்

    கேரளாவில் விபத்து! ஒருவர் பலி!

  • கேரளா மாநிலம் தளி பரம்பு பகுதியில் நிலை தடுமாறிய பள்ளி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 18 குழந்தைகள் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • மணிகண்டன்

    இவருக்கு பதில் இவர் :

  • சிட்னியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் மிட்சல் மார்ஷுக்கு பதிலாக அறிமுக வீரராக பியூ வெப்ஸ்டர் களமிறங்க உள்ளார்.
  • மணிகண்டன்

    விபத்து :

  • ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே ஆலங்குளம் என்ற இடத்தில் 2 அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் இரு பேருந்துகளில் பயணித்த 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
  • மணிகண்டன்

    மேயர் பிரியா :

  • நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் சென்னையில் சேதமடைந்த சாலைகளில், பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் புதிய சாலைகளும் அமைத்து வருகிறோம் என சென்னை மாநகர மேயர் பிரியா கூறியுள்ளார்.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்