Live : 76வது குடியரசு தின ஏற்பாடுகள் முதல்… தமிழக அரசியல் நகர்வுகள் வரை…
76வது குடியரசு தின்விழா ஏற்பாடுகள், மத்திய பட்ஜெட் 2025 உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.
சென்னை : நாளை இந்தியாவின் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டின் தலைநகர் டெல்லி, தமிழ்நாடு தலைநகர் சென்னை உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2025-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் தயாரிப்பின் ஒரு நிகழ்வான இனிப்பு (அல்வா) தயாரிக்கும் பணி நிறைவு பெற்றது. இதில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட நிதித்துறை முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.