Live : CISF-ன் 56வது ஆண்டுவிழா முதல்…, தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் வரை..,
இன்று CISF-ன் 56வது ஆண்டுவிழா அரக்கோணத்தில் நடைபெறுவது முதல், மும்மொழி கொள்கை விவகாரம் வரை பல்வேறு தகவல்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக பாதுகாப்பு படையான CISF படையினரின் 56வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவில் பங்கேற்க ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள CISF மண்டல பயிற்சி மையத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். இங்கு CISF வீரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சைக்கிள் பயணத்தையும் தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், இது பிடிவாதம் அல்ல மொழிக்கொள்கை குறித்த தெளிவு, LKG மாணவன் PhD பட்டதாரிக்கு அறிவுரை வழங்குவதா? தமிழ்நாட்டு மாணவர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் என பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.