Live : 2025 புத்தாண்டு கொண்டாட்டமும்… பல்வேறு அரசியல் நிகழ்வுகளும்…
2025 புத்தாண்டு நிகழ்வுகள், தலைவர்கள், பிரபலங்களின் வாழ்த்து செய்திகள் மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை இந்தசெய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர். தமிழகத்தில் சென்னை மெரினா, பெசன்ட் நகர் பகுதிகள், கோவை என பல்வேறு பகுதிகளிலும் புத்தான்டு கொண்டாட்டம் களைகட்டியது.
புத்தாண்டு தினத்தை தெய்வீக வழிபாட்டுடன் பிரசித்திபெற்ற கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவு முதலே சிறப்பு பூஜைகள், சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.