திருச்சி அருகே எரித்து கொல்லப்பட்ட சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாகவில்லை- அறிக்கையில் தகவல்!

திருச்சி அருகே சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் 14 வயது மகள், நேற்று ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் கூறுகையில், சிறுமி எரிந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறதாக தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த அந்த சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில், சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவில் அறிக்கையில் தெரியவந்ததது.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025