விழுப்புரத்தில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக.
விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீயை அதிமுக உறுப்பினர்கள் கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோர் தீவைத்து கொளுத்தினர்.பலத்த காயங்களுடன் ஜெயஸ்ரீ முண்டியப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அரசியல் கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக.இது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் ,கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் ,கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ,கலியபெருமாள் (சிறுமதுரை புதுக்காலணி கிளை செயலாளர் ) ,முருகன் (சிறுமதுரை காலனி கிளை செயலாளர் ) ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…