வடகிழக்கு மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கோவை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாள்களாக மழை நீடித்து வரும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் பக்கவாட்டு சுவர் சாய்ந்ததால் இன்று அதிகாலை 3 மணி அளவில் நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்த சம்பவத்தின் போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் 17 பேர் உடலை மீட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழக்க காரணமானவர்களை கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலை பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…