விசிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”வெல்லும் ஜனநாயகம்” மாநாடு திருச்சியில் தொடங்கியது.
திருச்சி சிறுகனூரில் நடைபெறும் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

அதன்படி வெல்லும் ஜனநாயகம் மாநாட்டிற்கு கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி தலைமை வகிக்கிறார். இதில் ஸ்டாலினுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகிய தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன் மொழிந்தார். மேலும், எஞ்சிய தீர்மானங்கள் பின்னர் முன்மொழியப்படும் என்றார்.

1. பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு
2. பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்பு
3. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுதல்
4. சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக அறிவித்தல்
5. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
6. வழக்காடு மொழியாகத் தமிழை அறிவித்தல்
7. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெற வேண்டும்
8. ஆளுநர் பதவியை ஒழித்தல்
9. மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும்
10. அமைச்சரவையிலும், மேலவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு
11. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுதல்
12. பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல்
13. வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுதல்

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் தேநீர் விருந்து தொடங்கியது..!

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்