சென்னை மண்டல வாரியான பட்டியல்.! ராயபுரத்தில் 1,768 பேருக்கு கொரோனா.!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  14,753  ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் நேற்று மட்டும் 4 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7128 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்தது. சென்னையில் மட்டும் நேற்று 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.  அதில், அதிகபட்சமாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ராயபுரத்தில் 1,768 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,300 பேரும், திரு.வி.க. நகரில் 1079 பேரும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 1000 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் இதுவரை 3,791 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்றும் தற்போது சிகிச்சையில் 5,461 பேர் இருக்கின்றார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

50 minutes ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

56 minutes ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

2 hours ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

3 hours ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

3 hours ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

3 hours ago