நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியல் ..! கேரளா முதலிடம்,தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் ?

Published by
Venu
  • 2019 -ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது.
  • இந்த பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

சமூக ,பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து ,தர வரிசை பட்டியலை தயாரித்தது நிதி ஆயோக். 2019 -ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது.இந்த பட்டியலில் கேரள மாநிலம் 70 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.2 -வது இடத்தில் 69 புள்ளிகளுடன் இமாசலப் பிரதேசம் உள்ளது.3-வது இடத்தில் 67 புள்ளிகளுடன் தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்கள் உள்ளது.

வறுமையின்மை பட்டியலில் 72 புள்ளிகள் பெற்று தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.பசியின்மையில் 10-வது இடத்தில் உள்ளது.உடல் நலத்தில் 76 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.கல்வித்தரத்தில் 70 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.பாலின சமநிலையில் 12-வது இடம்,சுத்தமான குடிநீர் 7 வது இடம் ,எரிசக்தி 4-வது இடம் ,பணி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் 6-வது இடத்தில் உள்ளது.தொழில்த்துறை,புதுமை கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பில் 14-வது இடத்தில் உள்ளது.சமநிலையின்மையை குறைப்பதில் 16-வது இடத்தில் உள்ளது.ஒட்டுமொத்த பட்டியலில் தான் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.மேலும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலிலும் கேரளா முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

5 minutes ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

45 minutes ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

1 hour ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

10 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

12 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

13 hours ago