பல குளறுபடிகளுக்கு மத்தியில் இன்று மாலை அல்லது நாளை காலை காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொன்னேரி (தனி), வேளச்சேரி, தென்காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், குளச்சல் உள்ளிட்ட 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடயுள்ளது. அதற்கான வேட்பாளர்கள் பட்டியல், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத், தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
முக்கிய நிர்வாகிகள் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் வேட்பாளர்களைத் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பிவைத்ததாகவும், கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு தரக்கூடாது எனக்கூறி அவர் போராட்டம் நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, காங்கிரஸ் சார்பில் விஜயதரணிக்கு போட்டியிட வாய்ப்பு தரக் கூடாது என வலியுறுத்தி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமாதமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பல குளறுபடிகளுக்கு மத்தியில் இன்று மாலை அல்லது நாளை காலை காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்த எதிர்பார்ப்புகள், அதிகரித்திக்கொண்டே வருகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…