இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் – முத்தரசன் அறிவிப்பு ..!

Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின்  பட்டியலை  மாநில செயலாளர் முத்தரசன்  வெளியிட்டுள்ளார்.

சென்னை உட்பட பிற மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின்  பட்டியலை  மாநில செயலாளர் முத்தரசன்  வெளியிட்டுள்ளார்.

அதில், தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ். ஏழுமலை (வார்டு 193), எம். ரேணுகா (வார்டு 42) ஆர். விஜயகுமார் (வார்டு 84) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும்,  திருப்பூர் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 7,11,23,27,31, 37, 54 வார்டுகள் , மதுரை மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 26, கும்பகோணம் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 7, தூத்துக்குடி மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 23, ஈரோடு மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 11, சேலம் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 21, ஓசூர் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 26,19,7,24 தஞ்சை மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 15 உள்ளிட்ட பல வார்டுகளில் போட்டியிடும்  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்