பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!தருமபுரியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ்!!
- தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- மக்களவை தேர்தளுக்கான பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும் , தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும் , த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி,என்.ஆர்.காங்கிரஸ் தலா 1 தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார்.முதற்கட்டமாக 5 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- தருமபுரி – அன்புமணி ராமதாஸ்
- விழுப்புரம் – வடிவேல் ராவணன்
- கடலூர் – கோவிந்தசாமி
- அரக்கோணம் – ஏ.கே.மூர்த்தி
- மத்திய சென்னை – சாம் பால் ஆகியோர் மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.