தமிழ்நாட்டில் சிறந்த ஆடை அணியும் அரசியல்வாதிகள் பட்டியல் வெளியீடு..! முதலிடம் பிடித்தது யார் தெரியுமா..?
பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று, தமிழ்நாட்டில் சிறந்த உடை அணியும் அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று, தமிழ்நாட்டில் சிறந்த உடை அணியும் அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் 10 அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் பெயர்களை தர வரிசைப்படி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த பட்டியலில் முதலிடத்தை பாமக கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில், திமுகவின் மக்களவை உறுப்பினர் கலாநிதி மாறன் அவர்கள் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் பெற்றுள்ளார்.
நான்காவது இடத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், ஐந்தாவது இடத்தை திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களும், ஆறாவது இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களும், ஏழாவது இடத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் தாகூர் அவர்களும், எட்டாவது இடத்தை அதிமுக கட்சியை சார்ந்த அப்சரா ரெட்டி அவர்களும், ஒன்பதாவது இடத்தை பாஜக கட்சியை சேர்ந்த வினோத் பி.செல்வம் அவர்களும், 10-வது இடத்தை மநீம கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த, மகேந்திரன் அவர்களும் பிடித்துள்ளனர்.