அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!ஓ.பி.எஸ்.மகன் தேனியில் போட்டியிடுகிறார்!!

Default Image
  • தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • மக்களவை தேர்தளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும் , தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும் , த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி,என்.ஆர்.காங்கிரஸ் தலா 1  தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Image

 

Image

 

Image

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:

 

  1. சேலம் – K.R.S.சரவணன்
  2. நாமக்கல் – காளியப்பன்
  3. கிருஷ்ணகிரி – கே.பி.முனுசாமி,
  4. ஈரோடு – மணிமாறன்,
  5. கரூர் – தம்பிதுரை,
  6. திருப்பூர் – எம்.எஸ்.எம் ஆனந்தன்,
  7. பொள்ளாச்சி – C. மகேந்திரன்
  8. ஆரணி – செஞ்சி ஏழுமலை
  9. திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
  10. சிதம்பரம்(தனி) – சந்திரசேகர்
  11. பெரம்பலூர் – என்.ஆர்.சிவபதி,
  12. தேனி – ப.ரவீந்திரநாத்குமார்
  13. மதுரை – V.V.R.ராஜ்சத்யன்
  14. நீலகிரி(தனி) – M தியாகராஜன்
  15. திருநெல்வேலி – P.H.மனோஜ்பாண்டியன்
  16. காஞ்சிபுரம்(தனி) – மரகதம் குமரவேல்
  17. தென் சென்னை – J.ஜெயவர்தன்
  18. நாகை(தனி) – ம.சரவணன்
  19. மயிலாடுதுறை – S.ஆசைமணி
  20. திருவள்ளூர்(தனி) – டாக்டர் P.வேணுகோபால் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பெரிதிம் எதிர்பார்க்கப்பட்ட துணை முதல்வர் மகன் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்