டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு..! அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரிம் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமையாது: திருமாவளவன் திட்டவட்டம்
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி., 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்துக்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING | டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வு, பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமல்! pic.twitter.com/CpWPDOEMlB
— Spark Media (@SparkMedia_TN) January 29, 2024