மதுபான கடைகளை உரிய நேரத்தில் மூட வேண்டும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil balaji

சென்னையில் கலால் துறை அதிகாரிகள் உடனான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர் (கலால்) மற்றும் உதவி ஆணையர்களுடனான (கலால்) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான இந்த ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மதுக்கடைகள், மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்பதை கண்காணித்து, களஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகளின் மெத்தனால் உரிய உரிமதாரர்களுக்கு விற்கப்படுகிறதா என்பதையும் தொழிற்சாலை உற்பத்திக்கு மட்டுமே எத்தனால் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையுடன் இணைந்து கண்காணிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநில மது, கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்