டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை.!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் மது விற்பனை அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 426 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது . சென்னை மண்டலத்தில் ரூ.100.43 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடி, மதுரை மண்டலத்தில் 87.28 கோடி, சேலம் மண்டலத்தில் 79.82கோடி, கோவை மண்டலத்தில் 76.12 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதால் மது விற்பனை அதிகரித்துள்ளது.