தமிழகம் முழுவதும் காலை 10 முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை நீட்டிக்க டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலனை முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால்,டாஸ்மாக் கடைகள் உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபான கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது. இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
மது கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் காலை 10 முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை நீட்டிக்க டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலனை முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் இரவு 7 மணி வரை மது விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 142 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…