மது விற்பனை கொள்ளை சமம்.. நீதிபதிகள் கருத்து…!
டாஸ்மாக்கில் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதிகள், பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருகிறார்கள்.
மதுவை கூடுதல் விலைக்கு விற்பது, அவர்களிடமே கொள்ளையடிப்பது போல உள்ளது என கருத்து தெரிவித்தனர். கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் நபர்களிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் யாரை அரசு காவல்துறை மூலமாக கைது செய்துள்ளது..? என கேள்வி எழுப்பினர். மேலும், மதுபான கடைகளில் நீதிபதிகளே நேரடியாக ஆய்வு நடத்த நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர், அரசு விரிவான பதிலை அளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.