தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

Tasmac Elite

டாஸ்மாக் எலைட்டில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது. 

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம். இதில், குவார்ட்டருக்கு ரூ.10, பாட்டிலுக்கு ரூ.320 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வின்படி 330 மில்லி வெட்மென் பில்சென்னர் பீர் ரூ.280ல் இருந்து ரூ.290 ஆகவும், 500 மில்லி ஜெர்மணியா பில்ஸ்நர் பீர் (கேன்) ரூ.250ல் இருந்து ரூ.27 ஆகவும், 300 மில்லி ஹாவெர்லி விட் பீர் ரூ.290ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 750 மில்லி ஸ்காட்ஸ் கிரே பிளென்டெட் ஸ்காட்ச் விஸ்கி ரூ.2000ல் இருந்து ரூ.2240 ஆகவும், 750 மில்லி பிபிடர் ஜின் ரூ.2220 முதல் ரூ.2460 ஆகவும், 750 மில்லி ஜேமிசன் ஐரிஸ் விஸ்கி ரூ.3030 முதல் ரூ.3270 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

Liquor price hike

[Image Source : Twitter/@Nandhini_Twits]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்