டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் – தமிழ்நாடு அரசு ஆலோசனை

tetra packets

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை. 

டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை விற்பனை செய்வது தொடர்பாக சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

டெட்ரா பாக்கெட்டுகள் எளிதில் உடையாது, செலவு குறைவு மற்றும் கலப்படம் செய்ய முடியாது என்பதால், அவற்றை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், கண்ணாடி பாட்டில்களை விட செலவு குறைவு என்பதாலும், டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானங்களை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்பதாலும் அவற்றை கொண்டு வர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்