3 மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான விநியோகம் நிறுத்தம்..!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான விநியோகம் நிறுத்தம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 350-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், 120 நட்சத்திர ஹோட்டல்களுக்கு மதுபானங்கள் கொண்டு செல்லப்படவில்லை.
டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு டாஸ்மாக் நிறுவனம் நான்கரை மாத வாடகை ரூ.4.75 கோடி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. நிலுவைத் தொகை தராததால் மதுபானங்கள் கொண்டு செல்ல ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம். வாகனங்களை வழங்கவில்லை இதன் காரணமாக இந்த மூன்று மாவட்டங்களுக்கும் மதுபான விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.