நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மது பானங்களை பயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில், ஏப்.25-ஆம் தேதிக்குள் இந்த கண்ணாடி பாட்டில்களை திரும்ப பெற மாற்றுத் திட்டம் வகுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நீலகிரி மாவட்ட டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு, தமிழக அரசின் சார்பில் கூடுதல் செயலாளர் எஸ்.கே பிரபாகர் அவர்கள் உத்தரவு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட வேண்டும் என்றும், காலி மது பாட்டில்களை மீண்டும் மதுபான கடைகளிலேயே திருப்பி செலுத்தினால் பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்பட வேண்டும் என்றும், நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில், இந்த மது பாட்டில் நீலகிரியில் விற்பனை செய்யப்பட்டது என்பதற்கான முத்திரை இடம் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. மேலும், மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…