12 லட்சம் செலவில் 13500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்காக 81000 உதடு மறைவற்ற முகக்கவசம் வழங்கப்படுகின்றன.
செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் உடன் அவர்களது பெற்றோர்கள், பாதுகாவலர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியவர்கள் தகவலை பரிமாற்றம் செய்வதற்கு முக்கியமாக பயன்படுவது உதடு அசைவு .
செவித்திறன் மற்றும் வாய் பேச இயலாதவர்கள் உதடு அசைவு மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில் வைரஸ் தொற்று காரணமாக முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது.
முகக்கவசம் அணிவது மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத முடியாதவர்களுடன் தகவலைப் பரிமாற்றுவது சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தகவலை பரிமாறி கொள்ளும் வகையில் அதற்கேற்ப உதடு மறைவற்ற முகக்கவசங்களை தமிழக அரசு வினியோகம் செய்ய உள்ளது.
இந்த முகக்கவசங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் மூலமாக செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் , அவர்களது பெற்றோர்கள், பாதுகாவலர்கள், பணிபுரிபவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 12 லட்சம் செலவில் 13500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்காக 81000 உதடு மறைவற்ற முகக்கவசம் வழங்கப்படுகின்றன.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…