கர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!
திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் போட்டியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டி அபுதாபி உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இதனிடையே, திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மஞ்சள் நிற அணியினர் களத்தில் இறங்கும் நேரம் வந்துவிட்டது என உங்களுக்கு தெரியும், கர்ஜிக்க உள்ள சிங்கங்களுக்கு தமது மண்ணிலிருந்து விசில் அடிப்போம். அத்துடன் கேப்டன் தோனி மற்றும் அணிக்கு வெற்றி கிடைக்க தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
You know it’s that time of the year when #Yellove is in air, #whistlefromhome all around and the lion is set to roar. Captain MS @msdhoni ! Good luck team @ChennaiIPL #CSKvsMI
— M.K.Stalin (@mkstalin) September 19, 2020