மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆதார் இணைப்பு மூலம் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தாலும், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு மூன்று வீடுகள் உள்ள இடங்களில் பொது (காமன் சர்வீஸ்) மின் இணைப்பிற்கு வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல.
2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்வதை விடுத்து மாதம் தோறும் மின் கட்டணத்தை கணக்கீடு செய்து வசூல் செய்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்வதை விடுத்து மாதம் தோறும் மின் கட்டணத்தை கணக்கீடு செய்து வசூல் செய்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும்.
— CPIM Tamilnadu (@tncpim) December 5, 2022