அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Websites-களில் வரும் Link-களில் சென்று எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Websites-களில் வரும் Link-களில் சென்று Mobile No, Account No, OTP, Debit Card, Cvv போன்ற எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஊரப்பாக்கத்தை சேர்ந்த திரு.சுதாகர் என்பவர் தனது Central Bank of India வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணம் ரூபாய் 1,52,200/- (ஒரு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து இருநூறு)-ம் எடுக்கப்பட்டு விட்டதாகவும் அந்த பணத்தை மீட்டு தருமாறு செங்கல்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்பு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக வங்கி கணக்கு முடக்கப்பட்டது. மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணாசிங் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.பொன்ராமு அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திரு. R.சிவக்குமார், காவல் உதவி ஆய்வாளர் திரு. B.தனசேகரன் மற்றும் காவலர்கள் அடங்கிய செங்கல்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் காவல் துறையினரால் தொடர் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபரின் வங்கி கணக்கிற்கு பணம் ரூபாய் 1,52,200/- (ஒரு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து இருநூறு)-ம் வரவு வைக்கப்பட்டது.
பொதுமக்கள் சைபர் க்ரைம் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்கவேண்டும். மேலும் எந்தவொரு நபருக்கும் பணம் அனுப்பும் முன்பு அவரது உண்மைதன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். அநாமதேய நபர்களிடமிருந்து வரும் SMS E-mail மற்றும் Website -களில் வரும் Link -களில் சென்று Cell No, Bank Account No, OTP, Debit/Credit Card/CW போன்ற எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.சைபர் கிரைம் பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வளைதளத்தில் தங்கள் புகார்களை பதிவிடவும்.
சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதியிழப்புகளுக்கு 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…