டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான மழை., மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Default Image

காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைகாலில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தென் மாவட்டங்கள் , கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஜனவரி 13-ஆம் தேதி தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 14,15-ல் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் புதுச்சேரி , காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று தென்மேற்கு வங்ககடல் , அதை ஒட்டிய பகுதிகளில் 3 கீ.மீ உயரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இடி , மழையுடன் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 35 கீ.மீ முதல் 45  கீ.மீ வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest