உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்! இளைஞரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த ராமதாஸ்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு இரங்கல் தெரிவித்த ராமதாஸ்.
சமீப காலமாக இளம் வயதினரை, ஆன்லைன் சூதாட்டம் தனது வலைக்குள் சிக்க வைத்துள்ளது என்று தன சொல்ல வேண்டும். இந்த சூட்ட விளையாட்டில் முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாடுகின்றனர். நாளடைவில், இந்த சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகிவிடுகின்றனர். இதனால், தங்களது பணத்தை இழப்பதோடு, இறுதியில், தங்களது உயிரையும் கொள்கின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், பணத்தை இழந்த வேதனையில், சென்னையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது மரணத்திற்கு டாக்டர்.ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘அண்ணலின் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர், சென்னையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்த சில வாரங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டமும் தொடர்கிறது, தற்கொலையும் தொடர்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஓர் உயிர் கூட பலியாகக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025