முக்கியச் செய்திகள்

பட்டாசுக் கடைகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.! வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தகவல்.!

Published by
செந்தில்குமார்

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில், பட்டாசு கடைகளுக்கு விற்பனைக்கான உரிமம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு கடைகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்கிரம ராஜா, “பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகளை தமிழகம் முழுவதும் வியாபாரிகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒரு நாளைக்கு முன்பாக தமிழக முதலமைச்சரிடம் இது சார்பாக மனு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறை ஆணையர் தலைமையில் சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் எங்களை அழைத்து பேசினார்கள்.”

“அந்த கூட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து ஒரு சுமுகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பட்டாசு வழங்கிடுவோம் எந்த குளறுபடியும் இதில் இருக்காது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். வருகின்ற 2024ம் ஆண்டு நடைமுறையில் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டி இருந்தால் அனைவரையும் அழைத்து ஆலோசனை செய்வோம்.”

“எனவே இந்த ஆண்டு எந்த குளறுபடியும் கிடையாது. எந்த இடையூறும் இல்லாமல் அனைத்து கடைகளுக்கும் உரிமம் வழங்கி விடுவோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பட்டாசு வியாபாரிகளும் அச்சமின்றி வணிகத்தை செய்யுங்கள், அதேபோல அரசு அளித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்போடு பொதுமக்களுக்கும் யாருக்கும் எந்த விபத்தும் இடையூறும் இல்லாமல் தீபாவளி கொண்டாடுங்கள்.”

“அதேபோல பொதுமக்களும் ஆன்லைன் மூலமாக பட்டாசு வாங்காமல், நேரடியாக கடைகளுக்கு சென்று பட்டாசு வாங்க வேண்டும் என்று வலிறுத்துகிறேன். சென்னையில் மொத்தமாக மொத்தமாக 685 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 250 கடைகளுக்கு மட்டுமே உரிமம் கொடுக்கப் பட்டுள்ளது. இப்போது பேச்சு வார்த்தையில் சுபகமாக முடிந்துள்ளதால் அனைத்து கடைகளுக்கும் உரிமம் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.” என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கூறினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

18 minutes ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

3 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago