11-ம் தேதி சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் ..!திருமாவளவன் அறிவிப்பு
வரும் 11-ம் தேதி சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 11-ம் தேதி சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறும் . இதனால் தமிழக அரசியலிலோ, திமுக கூட்டணியிலோ எந்த சிக்கலும் வராது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.