தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டு! – திருமாவளவன்
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளை தனித் தொகுதிகளாகவும், சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விசிக சார்பில் தமிழக அரசிற்கு பாராட்டு.
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளை தனித் தொகுதிகளாகவும் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளை தனித் தொகுதிகளாகவும் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் ஆகிய விளிம்புநிலை மக்களை அதிகார வலிமையின்வழி மேம்படுத்தும் ஒரு சமூகநீதி அரசாக தமிழக அரசு விளங்குகிறது என்பதை மீண்டும் நிறுவியுள்ளது. இத்தகைய அறிவிப்பைச் செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி தனித் தொகுதியாக அறிவிப்பு!
சென்னை உட்பட 11 மாநகராட்சிகள் பெண்களுக்கென ஒதுக்கீடு!
அதிகார வலிமையின் மூலம் விளிம்புநிலை மக்களை மேம்படுத்தும் சமூகநீதி அரசு!
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டு! #சென்னைமாநகராட்சி_தனித்தொகுதி @CMOTamilnadu pic.twitter.com/ttozSu4g88— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 18, 2022