தமிழக ஆளுநர் மாற்றப்பட்டதால் தமிழகத்திற்கு விமோசனம் – வைகோ..!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டதால் தமிழகத்திற்கு விமோசனம் பிறந்து இருக்கின்றது என்றுதான் கருதுகிறேன் என வைகோ கூறியுள்ளார்.
நாகாலாந்து ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி பணியாற்றி வந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டதால் தமிழகத்திற்கு விமோசனம் பிறந்து இருக்கின்றது என்றுதான் கருதுகிறேன். எனவே தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் வரம்பிற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பெரியார், அண்ணாவின் எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்படுகிறது. எவரின் மனதையும் புண்படுத்தாமல் அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.