President house of India reply to MDMK Leader Vaiko [File Image ]
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதலே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிர்வாக ரீதியிலும் சரி, கருத்துக்கள் வாயிலாகவும் சரி மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஆளுனரை திரும்ப பெற கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆளுநருக்கு எதிராக தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
இருந்தும் இந்த கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை குறிப்பிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும். என்று மதிமுக சார்ப்பில் அக்கட்சி தலைவர் வைகோ தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் , பொதுமக்கள் என 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு அந்த கோப்புகள் அனைத்தும் 60 பெட்டிகளில் வைக்கப்பட்டு குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இது தொடர்பாக அப்போது மதிமுக தலைவர் வைகோ கூறுகையில், ஆளுநர் ரவியை திரும்ப பெற கோரிய 50 லட்சம் கையெழுத்து அடங்கிய கடிதங்களை குடியரசு தலைவரை நேரில் சந்தித்து கொடுக்க அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் குடியரசு தலைவருக்கு பணிச்சுமை காரணமாக நேரம் ஒதுக்கமுடியவில்லை என்று கூறினார்கள். இதனால், குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.
இந்நிலையில், வைகோ அனுப்பி வைத்த கையெழுத்து கோப்புகள் குறித்து குடியரசு தலைவர் மாளிகை பதில் கடிதம் அனுப்பியுள்ளது. தாங்கள் அனுப்பி வைத்த கடிதங்கள் கிடைத்தது. இவை அனைத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் கவனற்கு அனுப்பி வைத்துள்ளோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…