ஆளுநர் ரவி விவகாரம்.. மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்ட 50 லட்சம் கையெழுத்துக்கள்.! வைகோவுக்கு குடியரசு தலைவர் மாளிகை பதில்.! 

President house of India reply to MDMK Leader Vaiko

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதலே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிர்வாக ரீதியிலும் சரி, கருத்துக்கள் வாயிலாகவும் சரி மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஆளுனரை திரும்ப பெற கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆளுநருக்கு எதிராக தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.

இருந்தும் இந்த கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை குறிப்பிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும். என்று மதிமுக சார்ப்பில் அக்கட்சி தலைவர் வைகோ தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் , பொதுமக்கள் என 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு அந்த கோப்புகள் அனைத்தும் 60 பெட்டிகளில் வைக்கப்பட்டு குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

RN Ravi : தமிழக மக்களின் கருத்துகளை கேட்க கூட குடியரசு தலைவர் அவகாசம் தரவில்லை.! வைகோ பரபரப்பு பேட்டி.!

இது தொடர்பாக அப்போது மதிமுக தலைவர் வைகோ கூறுகையில், ஆளுநர் ரவியை திரும்ப பெற கோரிய 50 லட்சம் கையெழுத்து அடங்கிய கடிதங்களை குடியரசு தலைவரை நேரில் சந்தித்து கொடுக்க அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் குடியரசு தலைவருக்கு பணிச்சுமை காரணமாக நேரம் ஒதுக்கமுடியவில்லை என்று கூறினார்கள். இதனால், குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.

இந்நிலையில், வைகோ அனுப்பி வைத்த கையெழுத்து கோப்புகள் குறித்து குடியரசு தலைவர் மாளிகை பதில் கடிதம் அனுப்பியுள்ளது. தாங்கள் அனுப்பி வைத்த கடிதங்கள் கிடைத்தது. இவை அனைத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் கவனற்கு அனுப்பி வைத்துள்ளோம் என  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்