இந்தியில் கடிதம் – அமைச்சருக்கே திருப்பி அனுப்பிய சு.வெங்கடேசன் எம்பி.!

மத்திய கலச்சாத்துறை தனக்கு இந்தியில் அனுப்பிய கடிதத்தை சு.வெங்கடேசன் எம்பி திருப்பி அமைச்சருக்கே அனுப்பினார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த காலங்களில் இந்தி கடிதங்கள் அரசிடம் இருந்து பெற்றேன். இது கலாச்சார அமைச்சகத்தின் முறை போல என்றும் அமைச்சக அதிகாரிகள் சட்டத்தை மீறியது, அரசாங்கம் நீதிமன்றத்தின் முன்பு அளித்த உறுதி மொழியை மீறியது நீதி மன்ற அவமதிப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்புகிறேன் என்றும் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களை செய்தால் எதிர்ப்பை கைவிட்டு விடுவோமென நினைக்காதீர்கள் என் கூறியுள்ளார். மேலும் இப்படி ஆத்திரமூட்டுகிற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகளிடம் அறிவுரை கூறுங்கள் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் இந்தி கடிதங்கள் அரசிடம் இருந்து வரப் பெற்றேன். இது கலாச்சார அமைச்சகத்தின் முறை போல.
அமைச்சக அதிகாரிகள் சட்டத்தை மீறியது, அரசாங்கம் நீதிமன்றத்தின் முன்பு அளித்த உறுதி மொழியை மீறியது நீதி மன்ற அவமதிப்பு.
கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்புகிறேன் #தமிழ் #Hindi pic.twitter.com/FZS69hWf04
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 28, 2021