களப்பணியாற்றுவோம், கண்ணீரைத் தடுப்போம்! – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
ஒன்றிணைவோம் வா திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவிகளை வழங்கிடுவீர் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்.
களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம் என்று தொடங்கி, மே 7ம் தேதி அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே உயிர்வளி உற்பத்தியைப் பெருக்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் அமைப்புகளும் உயிர்வளி செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன.
தேர்தலுக்கு முன்பாகவே ‘ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினோம். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கி கழகத்தினர் மேற்கொண்ட பணிகள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதாக இருந்தது.
நம் அரசு அமைந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உயிர்வளி, ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி என உயிர் காக்கும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கழகத்தின் சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தை மீண்டும் தொடங்கிட வேண்டும் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகத்தினர் மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது.
பொறுப்புடனும் – தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் அரசின் தனி மனித இடைவெளியைக் விதிமுறைகளுக்குட்பட்டு கடைப்பிடித்து பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் நானும் உடன்பிறப்புகளைப் போலவே களத்தில் இருப்பேன் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
#Covid19 பேரிடரிலிருந்து மக்களை மீட்க கழக அரசு போர்க்கால வேகத்தில் இயங்கி வருகிறது. கழகத்தினரும் #OndrinaivomVaa திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவிகளை வழங்கிடுவீர்! MLAக்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலம் இது!
களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம்! #LetterToBrethren pic.twitter.com/jYkRGWBIp7
— M.K.Stalin (@mkstalin) May 14, 2021