‘ஒன்றிணைந்து துயர் துடைப்போம்’ – சுற்றறிக்கை வெளியிட்ட கனிமொழி எம்.பி
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிரணி சகோதரிகள், தங்கள் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளைச் செய்யத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் வெள்ளபாதிப்பால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு, நிவாரண பணிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை முதல் மிக அதிக கன மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிரணி சகோதரிகள், தங்கள் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளைச் செய்யத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மகளிரணியினர் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், நிவாரணப் பணிகளின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.’ எனத்தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்து துயர் துடைப்போம்.#NorthEastMonsoon pic.twitter.com/vOWAuKvnTu
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 9, 2021